
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சிக்கு உலக வெற்றிக் கழகம் எனப் பெயர் வைக்காதது ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்குவதாக விஜய் அறிவித்ததில் இருந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்த சீமான், அக்கட்சியின் முதல் மாநாட்டில் தமிழும், திராவிடமும் தனது கொள்கை என்று விஜய் அறிவித்தார்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் நடிகர் விஜய்யையும் அவரது கட்சியையும் சீமான் விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது:
“மொழி, இனம் என அடையாளப்படுத்துவது பிரிவினைவாதம் எனக் கூறுகிறார். உலகம் முழுவதும் மொழியின் அடிப்படையில்தான் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அப்படியென்றால், உங்கள் கட்சியை உலக வெற்றிக் கழகம் என்று தொடங்கியிருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைத்தது ஏன்?
உங்களுக்கு கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் முழுவதும் ரசிகர்கள் அதிகம். கேரளாவில் கட்சி தொடங்காமல் இங்கே வந்தது ஏன்? இதே கேள்விதான் அண்ணாமலையிடமும் கேட்டேன். கர்நாடகத்தில் பாஜக தலைவர் ஆகியிருக்கலாமே என்று.
கார்த்திகேய பாண்டியன் என்ற தமிழன் ஒடிஸாவை ஆள முயற்சி செய்தவுடன், தமிழன் ஒடிஸாவை ஆட்சி செய்வதா எனக் கூறி அனைவரும் அவரை தோற்கடித்தீர்கள். அதையே நான் பேசினால் பாசிசம், நீங்கள் பேசினால் தேசியவாதமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.