மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,449 கனாடியாக அதிகரித்துள்ளது.


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,449 கனாடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 9,154கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 10,449 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 2,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.51அடியிலிருந்து 106.98அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 74.18 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...