
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதியும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9ஆம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்குகிறது.
தொடர்ந்து டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டு தேர்வு விடுமுறை 9 நாட்களுக்கு பின் ஜனவரி 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரையாண்டுத் தேர்வு அட்டவணையும் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.