விழுப்புரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கள ஆய்வுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து கனமழையினை எதிர்கொள்ள டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (26.11.2024) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் காணொலிக் காட்சி வாயிலாக மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.
மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பான இன்றைய அறிவிக்கையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, 28.11.2024 மற்றும் 29.11.2024 ஆகிய நாட்களில் விழுப்புரத்தில் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சி மற்றும் கள ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் மாவட்டந்தோறும் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த நவம்பர் 14, 15 தேதிகளில் அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் நேரடிக் கள ஆய்வை மேற்கொண்ட அவர், நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்லவிருப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

14 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல்: தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை

விழுப்புரத்தில் இரண்டாமாண்டு வைணவ மாநாடு

காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!

மீண்டும் மழை! பிப். 21ல் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

