எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நடுக்கடலில் சிக்கியுள்ள 6 மீனவர்களை மீட்க வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்

கடலூர் நடுக்கடலில் தனியார் துறைமுகத்தில் தவிக்கும் 6 மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

News image
கோப்புப்படம்
Updated On :28 நவம்பர் 2024, 9:36 am

DIN

கடலூர் அருகே நடுக்கடலில் தனியார் துறைமுகத்தில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடலூரில் தைகால் தோணித்துறையை சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு சித்திரைப்பேட்டை அருகே கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

தண்ணீரில் தத்தளித்த மீனவர்கள் மற்றொரு படகு மூலம் மீட்கப்பட்டு அருகே உள்ள தனியார் கப்பல் இறங்கு தளத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

6 மீனவர்களும் சுமார் 2 நாள்களாக நடுக்கடலில் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கக்கோரி கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கடலில் சீற்றம் காணப்படுவதால் அவர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடலூர் பகுதியில் கடலில் விரிக்கப்பட்டிருந்த  வலைகளை எடுக்கச் சென்றபோது படகு கவிழ்ந்ததால் கடலில் விழுந்து தத்தளித்த கடலூர் தைகால் தோணித்துறை பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் நீச்சலடித்து நடுக்கடலில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான சிறிய துறைமுகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தனியார் துறைமுகத்தில் உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லாமல் இரண்டாவது நாளாக தவித்து வரும் அவர்கள் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தங்களின் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.

ஆனால், அவர்களை மீட்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

வங்கக்கடலில் இன்று மாலையில் உருவாகவிருக்கும்புயல் அடுத்த இரு நாட்களுக்குள் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடக்கும்  என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக மீனவர்கள் அஞ்சுகின்றனர்.

எனவே, இனியும் தாமதிக்காமல்  நடுக்கடலில் தனியார் துறைமுகத்தில் தவிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க  மத்திய, மாநில  அரசுகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.