கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம்: முதல்வர் ஸ்டாலின்!

கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை - கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
உடன் சமத்துவ மக்கள் கழகத் தலைவர் நாராயணன்.
காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை - கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடன் சமத்துவ மக்கள் கழகத் தலைவர் நாராயணன்.படம்| முதல்வர் எக்ஸ் பதிவு
Updated on
1 min read

கர்மவீரர் காமராஜரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 49-வது நினைவு தினத்தையொட்டி அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கிண்டியில் உள்ள மலர்வளையம் வைத்து காமராஜரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இதையும் படிக்க:ஜப்பானின் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து!

இந்தப் புகைப்படங்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இந்திய விடுதலைக்காகப் போராடி இன்னல்களை எதிர்கொண்டு, பின்னாளில் முதலமைச்சராகத் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மற்றும் தொழில்வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களது நினைவுநாள்! காந்தியப் பாதையிலிருந்து கடைசிவரை விலகாத கர்மவீரரின் வாழ்வு காட்டும் ஒளியில் நடைபோடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க:காமராஜர் நினைவு நாள்: ராகுல் காந்தி, கார்கே அஞ்சலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com