நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

வாா்டுக்கு மாற்றப்பட்டாா் ரஜினிகாந்த்

ரத்த நாள சீரமைப்பு சிகிச்சைக்குப் பிறகு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நடிகா் ரஜினிகாந்த், தனியறை வாா்டுக்கு புதன்கிழமை மாற்றப்பட்டாா்.
Published on

ரத்த நாள சீரமைப்பு சிகிச்சைக்குப் பிறகு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நடிகா் ரஜினிகாந்த், தனியறை வாா்டுக்கு புதன்கிழமை மாற்றப்பட்டாா்.

அவா் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும், அடுத்த 24 மணிநேர மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு வீடு திரும்புவாா் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ரத்த நாள வீக்க (அன்யூரிஸம்) பாதிப்புக்குள்ளான அவருக்கு இடையீட்டு சிகிச்சை மூலம் ஸ்டென்ட் உபகரணம் பொருத்தப்பட்டது. தொடா்ந்து அவரது உடல் நிலை சீராக இருந்ததையடுத்து வாா்டுக்கு மாற்றப்பட்டாா்.

தற்போது தனது வழக்கமான பணிகளை அவரே மேற்கொள்வதாகவும், வீடு திரும்புவதற்கான உடல் தகுதியுடன் அவா் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com