மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

எவ்வளவு தடைகள் வந்தாலும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்: கிரிக்கெட் வீரர் நடராஜன்

எவ்வளவு தடைகள் வந்தாலும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

News image

கிரிக்கெட் வீரர் நடராஜன்.

Updated On :5 அக்டோபர் 2024, 8:42 pm IST

எவ்வளவு தடைகள் வந்தாலும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 64வது ஆண்டு விழா சேலம் மாநகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசும் போது, சேலம் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானம் தற்போதைய இளைஞர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது.

இதை பயன்படுத்தி தன்னை போல் பலர் முன்னுக்கு வர வேண்டும். விளையாட்டுத் துறையில் சாதிக்க விடாமுயற்சி முக்கியம்; அதேபோல் நம்பிக்கை தான் மூலதனம்.

நிறைய கஷ்டங்களை தாண்டிதான் நான் இங்கு வந்துள்ளேன். என்னைப்போல் சேலத்தில் இருந்து நிறைய நடராஜன்கள் வர வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு உடற்தகுதி மிக முக்கியம்.

சேலத்தைச் சேர்ந்த நிறைய இளைஞர்கள் டிஎன்பிஎல், ஐபிஎல் போன்ற போட்டிகளில் விளையாட வேண்டும் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.