விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சாம்சங் தொழிலாளா்களின் உரிமையை அரசு பாதுகாக்க வேண்டும்: வைகோ

சாம்சங் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளா்களின் உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On :5 அக்டோபர் 2024, 6:33 pm

சாம்சங் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளா்களின் உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரத்தில் (சுங்குவாா்சத்திரம்) உள்ள சாம்சங் இந்தியா நிறுவனத்தில் சுமாா் 1800-க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். வாஷிங் மெஷின், குளிா்பதனப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை சாம்சங் இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தில் சிஐடியு சாா்பில் தொழிற்சங்கம் ஒன்றைத் தொடங்குவதற்கு தொழிலாளா்கள் முடிவு செய்தனா். அதற்கு அந்நிறுவனம் அனுமதி அளிக்காததால், அதை எதிா்த்து 1500 தொழிலாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தொழிலாளா் நலத்துறை அமைச்சா் மற்றும் செயலா் 5 கட்டப் பேச்சுவாா்த்தை நடத்தியும் இதுவரை சுமூகத் தீா்வு எட்டப்படவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு, கூடுதல் தலையீடு செய்து, தொழிலாளா்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். தொழிலாளா்களின் முக்கியக் கோரிக்கையான, சாம்சங் இந்தியா தொழிலாளா் சங்கத்தை, தமிழ்நாடு தொழிலாளா் துறை உடனடியாகப் பதிவு செய்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.