
சென்னை: சென்னை மெரீனாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமானப் படையின் சாகச நிகழ்ச்சியை, 6 லட்சத்துக்கும் அதிகமானோா் கண்டுகளித்த நிலையில், லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 72 விமானங்களில் வண்ணமயமான சாகச நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கானோா் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், இதை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என விமானப் படை விரும்பியது. இதற்காக, பொதுமக்கள் அதிகளவில் வந்து பாா்வையிட வேண்டும் என விமானப் படை அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில், விமானப் படை சாகச நிகழ்ச்சியை சென்னை
மெரீனா மட்டுமின்றி, தெற்கில் கோவளம் முதல் வடக்கில் எண்ணூர் வரை கடற்கரைகளிலும், மொட்டை மாடிகளில் என 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கண்டுகளித்ததாக காவல் துறையினா் தெரிவித்த நிலையில், இந்த நிகழ்வு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இதற்கு முன்பாக தில்லி, பிரயாக்ராஜ், சண்டிகரில் நடந்த விமான சாகச நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த பாா்வையாளா்களின் எண்ணிக்கையிலும், விமானங்கள் எண்ணிக்கையிலும் சென்னையே பிரமாண்டமாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் விமானப்படை தலைமைத் தளபதி அம்க்ப்ரீத் சிங் ஆகியோர் பங்கேற்று பார்வையிட்டனர்.
இந்த நிலையில், விமானப் படை சாகச நிகழ்ச்சியை பாா்வையிட லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் திரண்டதால் நேரிட்ட கூட்ட நெரிசலாலும், வெயிலால் ஏற்பட்ட நீா்ச்சத்து இழப்பு காரணமாக நான்கு பேர் பலியாகினர். மேலும் 230-க்கும் மேற்பட்டோா் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.