

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் திங்கள்கிழமை காலை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூரில் அமமுகவின் 4-ஆவது பொதுக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று காலை தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில், பொதுக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஒருமனதாக டிடிவி தினகரனை மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்துள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், கடந்த 2018-ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த அமமுக, கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.