மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,206 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை தனிந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை 11,208 கன அடியாக இருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 9,206 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 92.23 அடியில் இருந்து 91.73 அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க ! பட்டதாரி ஆசிரியா் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 54.65 டிஎம்சியாக உள்ளது.