திமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

கலைஞர் பூங்கா ஜிப்லைன் பழுதடையவில்லை: இபிஎஸ்-க்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில்

கலைஞர் பூங்கா ஜிப்லைன் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

கலைஞர் பூங்கா

Published On :

கலைஞர் பூங்கா ஜிப்லைன் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், எதிர்க் கட்சித் தலைவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் ஜிப் லைன் பழுதடையவில்லை. ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. பழுதடைவதற்கு இதில் ஒன்றுமில்லை.

மேலும் ஜிப்லைனில் இறங்கு தளத்திலேயே இறங்க இயலும். அவர்கள் சென்ற அந்த இருக்கைக்கு தேவையான உடல் எடைக்கும் இருந்த வேறுபாட்டின் காரணமாக ஒரு பத்து வினாடி அவர்கள் தேங்கினர். பின்னர் அவர்கள் சென்ற இருக்கைக்கு விசை கொடுக்கப்பட்டு அவர்கள் இறங்குதளம் சென்றடைந்தனர்.

ஆகவே எதிர்க் கட்சித் தலைவரின் அறிக்கை தவறானது. இந்த பூங்காவில் உள்ள உபகரணங்கள் தரமானவையே. இப்பூங்காவிற்குள் நுழைய பெரியவர்களுக்கு ரூ.100 சிறியவர்களுக்கு ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜிப் லைன், பறவையகம், கண்ணாடி மாளிகை, இசை நீறூற்று போன்றவை அந்தந்த சேவைக்கேற்ற குறைந்த கட்டணங்களே பெறப்படுகின்றன. பூங்காவிற்கு வரும் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலைஞா் நூற்றாண்டு பூங்காவில் ஈா்ப்புவிசை மூலமாக கம்பிவடத்தில் இயக்கப்படும் ஜிப்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 25 அடி உயரத்தில் 50 மீட்டா் தொலைவு பயணிக்கும் இந்த வசதிக்கு ஒரு நபருக்கு ரூ. 250, சிறுவா்களுக்கு ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை ஜிப்லைனில் பயணித்த இரு பெண்களின் டிராலி திடீரென நின்றது. சுமாா் 20 நிமிஷங்களுக்குப் பிறகு அவா்கள் கயிறு மூலமாக அவா்கள் மீட்கப்பட்டு கீழே இறக்கப்பட்டனா்.

பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பூங்கா திறக்கப்பட்டு 5 நாள்களிலேயே ஜிப்லைன் பழுதடைந்துள்ளது. அரசுப் பூங்கா புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது. பூங்காவுக்கு வரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று எடப்பாடி கே.பழனிசாமி தனது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா். தற்போது இந்த குற்றச்சாட்டுக்கு உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.