விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

மீண்டும் உதயநிதியின் காரில் ஏறிய இபிஎஸ்? காரணம் என்ன?

சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் காரில் எடப்பாடி பழனிசாமி ஏற முயன்றது குறித்து...

News image

சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்குத் தனித்தனியாகப் பேட்டியளித்த இபிஎஸ், உதயநிதி - ANI

Updated On :6 ஆகஸ்ட் 2026, 1:11 pm IST

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் காரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற முயன்றார்.

2026 - 27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் பேரவையில் இன்று (ஆக. 6) தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேரவையில் உரையாற்றினார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டனர்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அதேபோல், அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பின்னர், எடப்பாடி பழனிசாமி தவறுதலாக உதயநிதி ஸ்டாலினின் காரில் ஏற முயன்றார். இதனைத் தொடர்ந்து, தான் ஏற முயன்ற கார் தன்னுடையது அல்ல என உணர்ந்த இபிஎஸ், பின்னர் தன்னுடைய காரில் ஏறிச் சென்றார்.

இதேபோல, கடந்த திமுக ஆட்சியிலும் ஒருமுறை உதயநிதி ஸ்டாலினின் காரில் ஏற முயன்றார். இதனைக் குறிப்பிட்டுப் பேசிய அப்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய காரை எடப்பாடி பழனிசாமி எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என நகைச்சுவையாகக் கூறியிருந்தார்.

Summary

Did ADMK Leader Edappadi Palaniswami get into LoP Udhayanidhi Stalin's car again?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.