
சென்னை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்யத் தொடங்கி கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், சென்னையிலிருந்து இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
நேற்று(அக்.14) மாலை 6.40 மணிக்கு புறப்பட்ட லோக்மான்யா திலக் - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (12613) ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்.
நேற்று(அக்.14) இரவு 11.45 மணிக்கு புறப்பட்ட மங்களூரு சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (22638) திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
இன்று(அக்.15) இரவு 8.50 மணிக்கு புறப்படும், சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (22639), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை மார்க்கத்தில் இயக்கப்படும்.
நேற்று(அக்.14) மாலை 4.45 மணிக்கு புறப்பட்ட இந்தூர் - கொச்சுவேலி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22645), கொருக்குபேட்டை, பெரம்பூர் வழியாக செல்லும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு செல்லாது.
அதேபோல, நேற்று முன்தினம்(அக்.13) காலை 11.35 மணிக்கு புறப்பட்ட தான்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (13351), கொருக்குபேட்டை, பெரம்பூர் வழியாக செல்லும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் கிடையாது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் இந்த ரயில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(அக்.15) இரவு 10.50 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12657), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பதிலாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இன்றிரவு 11.20 மணிக்கு புறப்படும்.
இன்று(அக்.15) காலை 6 மணிக்கு புறப்பட்ட, ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352), கொருக்குபேட்டை, பெரம்பூர் வழியாக செல்லும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் கிடையாது.
இன்று(அக்.15) காலை 6.35 மணிக்கு புறப்பட்ட கொச்சுவேலி - கோரக்பூர் எக்ஸ்பிரஸ் (12512), கொருக்குபேட்டை, பெரம்பூர் வழியாக செல்லும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு செல்லாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.