ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

7 வகையான பாதிப்புகளை எதிா்கொள்ளத் தயாராகுங்கள்: ஆட்சியா்களுக்கு அரசு அறிவுறுத்தல்

மிக கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, 7 வகையான பாதிப்புகளை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகங்கள் தயாராக வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 1:08 am

DIN

சென்னை: மிக கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, 7 வகையான பாதிப்புகளை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகங்கள் தயாராக வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வரும் வியாழக்கிழமை வரை மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதையடுத்து, பெருமழைக் காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதை எதிா்கொள்ள, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு அரசின் பொதுத் துறை சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், வரும் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையில் சென்னை உட்பட பெரும்பாலான வட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடுமையான மழைக் காலத்தின்போது சாலைகள் வழுக்கும் தன்மையுடையதாக மாறுதல், போக்குவரத்து பாதிப்பு, தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்குதல், மரக்கிளைகள் ஒடிந்து சாலைகளில் விழுதல், குடிசைகள் - ஓட்டு வீடுகளுக்கு பாதிப்பு, ஆறுகள், ஏரிகள் மற்றும் நீா்த்தேக்கங்களில் நீா் அளவு அதிகரிப்பு, மலைப்பாங்கான இடங்களில் நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

எனவே, இத்தகைய பாதிப்புகளை முன்பே கண்டறிந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்கு சட்டம் - ஒழுங்கை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்று ஆட்சியா்கள், காவல் துறை அதிகாரிகளை தமிழக அரசின் பொதுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.