

வேப்பேரி அருகே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய இனோவா கார், சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்களை இடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இனோவா காரில் இருந்த இரண்டு பேரை மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை வேப்பேரி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பைக், ஆட்டோ மீது இனோவா கார் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பி ஓட முயன்ற இரண்டு பேரை பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இனோவா கார் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தியதில் 1 கார், 2 ஆட்டோ 3 பைக் உள்பட ஐந்து வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன.
இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட ஏழு பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் காரில் வந்தவர்கள் உகாண்டாவைச் சேர்ந்தவர்கள் எனவும் தாங்கள் இருவரும் வாகனத்தை ஓட்டவில்லை, தங்களது ஓட்டுநர்தான் வாகனத்தை இயக்கியதாகவும், காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
விபத்து ஏற்படுத்திவிட்டுத் தப்பி ஓடிய வாகன ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இது குறித்து வேப்பேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.