தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை

தீபாவளியன்று மழை பெய்யுமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வதென்ன?

தீபாவளியன்று மழை பெய்யுமா என்பது குறித்து பிரதீப் ஜான் தகவல்.
Published on

சென்னை: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்டிவிட்டது, இன்றே ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கிவிட்டனர். தீபாவளிக்குத் தயாராகி வருவோர் பலரின் கேள்வியாக இருப்பது வியாழக்கிழமை மழை பெய்யுமா? என்பதே.

தமிழகத்தில் தீபாவளியன்று மழை பெய்யுமா என்பது குறித்து தொடர்ந்து மழை நிலவரங்களை கணித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுவரும் தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருப்பதாவது, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கான மழைப்பொழிவு நிறைவடையும் நிலையில் உள்ளது. தீபாவளி நாளிலிருந்து குறிப்பாக காற்று வீசும் திசை கிழக்கு நோக்கி மாறுகிறது. தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், தெற்கு மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களின் சில பகுதிகளில் தீபாவளி நாளில் மழை பெய்யலாம்.

சரி நேராக விஷயத்துக்கு வரலாம்... நம்ம சென்னையில் மழை பெய்யுமா என்றால், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியன்று, ஒரு சில இடங்களில் (இங்கொன்றும் அங்கொன்றுமாக) அதிகாலையில் மழை பெய்யலாம்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இந்த ஆண்டு ஒரு நல்ல தீபாவளி நாள்தான். ஆனால் அதே வேளையில் டெல்டா மாவட்டங்கள், உள் மற்றும் தென் தமிழகத்திற்கு மிதமான மழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com