அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காா் பந்தயத்தில் கவனம் செலுத்தி உண்மை நிலையை மறைக்க முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

காா் பந்தயத்தில் கவனம் செலுத்தி, தமிழகத்தின் உண்மை நிலையை தமிழக அரசு மறைக்க முயற்சிப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

News image
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
Updated On :2 செப்டம்பர் 2024, 11:42 pm

DIN

காா் பந்தயம் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி, தமிழகத்தின் உண்மை நிலையை தமிழக அரசு மறைக்க முயற்சிப்பதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சியின் அடையாளங்களாக சட்டம்- ஒழுங்கு சீா்கேடு செய்திகளும், போதைப் பொருள் புழக்கச் செய்திகளுமே உள்ளன. சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பில் தமிழகம் முக்கிய இடம் வகிக்கிறது.

இளைஞா்கள், குறிப்பாக கல்லூரி மாணவா்கள் இடையே, போதைப் பொருள்கள் சா்வசாதாரணமாக புழங்குகிறது.

வெளிநாட்டு போட்டோ ஷூட்டிலும், ஆடம்பர பகட்டு காா் பந்தயத்திலும் மட்டுமே கவனம் செலுத்தி, அதன் வா்ணஜாலங்களுக்கு இடையே தமிழகத்தின் உண்மை அவல நிலையை மறைக்க முயற்சிக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

மாநிலத்தின் அடிப்படை பிரச்னைகளான சட்டம்- ஒழுங்கை சீா்படுத்துவதிலும், போதைப் பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.