முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

ஆந்திரத்தில் கனமழை: சென்னையிலிருந்து புறப்படும் ரயில்கள் ரத்து!

ஆந்திரத்தில் கனமழை: சென்னை சென்ட்ரல் - புதுதில்லி அதிவிரைவு ரயில் ரத்து!

News image
Updated On :3 செப்டம்பர் 2024, 2:13 pm IST

ஆந்திர பிரதேசத்தில் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளிலும், ரயில் பாதைகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆந்திர பிரதேசம், தெலங்கானா மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் பல, மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன, பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளடன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

  • இன்று(செப். 3) மாலை 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - புதுதில்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்(12615) ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • அதேபோல, இரவு 7 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - ஹௌரா மெயில்(12840) ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • ஜெய்ப்பூரிலிருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட வேண்டிய ஜெய்ப்பூர் - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ்(12970) ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • ஷாலிமர் - சென்னை சென்ட்ரல்இடையே இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்(12841) ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • புதன்கிழமை(செப். 4) காலை 7.15 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் - சந்திரகாசி அந்தியோதயா எக்ஸ்பிரஸ்(22842) ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரத்து புதுச்சேரி - ஹௌரா எக்ஸ்பிரஸ்(12868) ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • இரவு 9.05 மணிக்கு புறப்பட வேண்டிய புதுதில்லி - சென்னை சென்ட்ரல் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்(12622) ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • சனிக்கிழமை(செப். 7) அதிகாலை 3 மணிக்கு புறப்பட வேண்டிய திருநெல்வேலி - புரூலியா எக்ஸ்பிரஸ்(22606) ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • சனிக்கிழமை(செப். 7) அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - ஹௌரா எக்ஸ்பிரஸ்(12666) ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.