சென்னை அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்!
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பற்றி...


சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த மிரட்டலை தொடர்ந்து, மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் காவல் துறையினர் இன்று காலை சோதனை செய்தனர்.
காவல்துறையினர் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு விடுத்த மர்ம நபரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள் விடுத்த மிரட்டல்
ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு திங்கள்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய சோதனையில் புரளி எனத் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பள்ளி மாணவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சமீபகாலமாக, சென்னை விமான நிலையம், தமிழக முதல்வர் சென்ற விமானம் என தமிழகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...