கத்திக்குத்துக்குப் பிறகும் மக்கள் உயிரைக் காத்த இந்திய விமானி! மோடி புகழாரம்ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்: வெளியான தகவல்!

முன்னதாக பதிவு செய்யப்பட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமான அனுமதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

Vijay

விஜய் (கோப்புப்படம்) - Din

Published On :

முன்னதாக பதிவு செய்யப்பட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமான அனுமதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது

இதையொட்டி தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய த.வெ.க. பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்துக்கு அங்கீகாரம் கோரி கடந்த பிப்ரவரியில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமான அனுமதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை நடிகர் விஜய் முறையாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தேதி குறித்த அறிவிப்பை அதன் தலைவரும் நடிகருமான விஜய் நாளை அறிவிப்பார் என தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி கிடைத்திருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 22-ஆம் தேதி கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அப்போது கட்சியின் முதல் மாநாடு விரைவில் நடத்தப்படும், அதற்கான விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.