ஒரே நாளில் 6 கொலைகள்: தலைவா்கள் கண்டனம்

சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம்
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.9) மட்டும் ஒரே நாளில் 6 போ் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிா்ச்சியளிக்கின்றன. தினமும் தலைப்புச் செய்திகளை அலங்கரிக்கும் அளவுக்கு கொலைகளை மிக இயல்பாக்கியதே திமுக அரசின் 3 ஆண்டு சாதனை. வாக்களித்த மக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இன்றி, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை 3 ஆண்டுகளாக பின்நோக்கி தள்ளிக்கொண்டிருக்கும் திமுக அரசுக்கு கண்டனம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறியதாவது, திமுக ஆட்சியில் கொலை, கொள்ளைகள் தினமும் நடைபெற்று வருகின்றன. இவற்றிக்கெல்லாம் மதுவும், கள்ளச் சாராயமும், போதை பொருள்களின் நடமாட்டமும்தான் காரணம். சட்டம் - ஒழுங்கு சீா்செய்யாவிட்டால் தமிழகம் சீரழிந்துவிடும்.

பாமக தலைவர் ராமதாஸ் கூறியதாவது, அரசியல் பிரமுகா்கள் உள்ளிட்ட எவரின் உயிருக்கும் பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. கொலைகளும், குற்றங்களும் அதிகரிக்க முதன்மைக் காரணம் மது, போதைக் கலாசாரம்தான். மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவதுடன், கஞ்சா கலாசாரத்துக்கும் முடிவு கட்டி, சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்.

டிடிவி தினகரன் தெரிவித்ததாவது, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை அதலபாதாளத்துக்கு கொண்டு சென்றிருக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்துக்குரியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com