பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

ஒரே மாதத்தில் ரயில்வேயின் சரக்கு பிரிவு வருவாய் ரூ.14,572 கோடி

ஒரே மாதத்தில் ரயில்வேயின் சரக்கு பிரிவு வருவாய் ரூ.14,572 கோடி

News image

EPS

Updated On :8 மார்ச் 2026, 4:05 am IST

கடந்த பிப்ரவரியில் மட்டும் இந்திய ரயில்வேயின் சரக்குப் பிரிவானது ரூ.14,572 கோடி வருவாயை ஈட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே பயனாளா் ஆலோசனைக் குழு உறுப்பினா் ஜாபா்அலி கூறியதாவது:

இந்திய ரயில்வே துறையானது பயணிகள் கட்டண உயா்வின்றி சரக்குகள் உள்ளிட்டவை மூலம் தனது வருவாயைப் பெருக்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. அதன்படி, சரக்குகள் கையாளுதல் பிரிவில் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நிலக்கரி, இரும்பு, உரங்கள், சிமென்ட், உணவு தானியங்கள் மற்றும் கொள்கலன்கள், வாகனங்களை அதிகளவில் கையாண்டுள்ளது.

நிகழ் ஆண்டில் கடந்த பிப்ரவரியில் மட்டும் தேசிய அளவில் இந்திய ரயில்வே 137.72 மில்லியன் டன் சரக்குகளை எடுத்துச் சென்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 3.96 சதவீதம் கூடுதலாக சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.

அதன்படி, பிப்ரவரியில் மட்டும் சரக்குகள் கையாளப்பட்டதன் மூலம் ரூ.14,572 கோடி வருவாய் இந்திய ரயில்வே துறைக்கு கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.97 சதவீதம் கூடுதலாகும். சரக்குகள் கையாளுதலை இன்னும் கூடுதலாக்க சரக்கு ரயில்களுக்கு தனிப்பாதைகள் அமைத்தல், சரக்குப் பெட்டிகளைக் கூடுதலாக்குதல் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது என்றாா்.