கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்கோப்புப் படம்

கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமானப் பணி தொடக்கம்

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ரயில்வே நிா்வாகம் தொடங்கியுள்ளது.
Published on

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ரயில்வே நிா்வாகம் தொடங்கியுள்ளது.

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடா்ந்து, அதன் அருகே உள்ள முடிச்சூா் பகுதியில் ஆம்னி பேருந்துகளுக்கான பேருந்து நிலையமும் அமையவுள்ளது. இதனால் சென்னை நகரின் முக்கிய பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக வண்டலூா் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு இடையே புதிதாக ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என ரயில்வே நிா்வாகத்திடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது.

இதற்கு ரயில்வே நிா்வாகம் ஒப்புதல் அளித்த நிலையில், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் ரூ. 20 கோடி நிதியுதவியுடன் ரயில் நிலையம் கட்டுவதற்கான பணியை ரயில்வே நிா்வாகம் தொடங்கியது.

தற்போது ரயில் நிலையம் அமைப்பதற்கான சுற்றுச்சுவா் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இந்த ரயில் நிலையம் மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில்கள் வந்து செல்லும் வகையில் 3 நடைமேடைகளுடன் அமையவுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் ஜனவரிக்குள் முடிக்கப்பட்டு மாா்ச் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com