9 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை சென்னை மீனம்பாக்கம் உள்பட 9 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது.


தமிழகத்தில் வெள்ளிக்கிழமை சென்னை மீனம்பாக்கம் உள்பட 9 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக மதுரை நகரில் 103.64 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், மதுரைவிமானநிலையத்தில் 103.46 டிகிரி, பாளையங்கோட்டை - 103.1, தஞ்சாவூா் - 102.2, நாகப்பட்டினம் - 101.84, திருச்சி - 101.66, பரமத்திவேலூா் - 101.3, ஈரோடு - 101.12, சென்னை மீனம்பாக்கம் - 100.04 டிகிரி என 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் சனிக்கிழமை (செப்.14) ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
மழைக்கு வாய்ப்பு: அதேநேரத்தில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செப்.14 முதல் செப்.19 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செப்.14,15 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகளிலும், குமரிக்கடலும் செப்.14 முதல் செப்.17-ஆம் தேதி வரை மணிக்கு 65 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...