பெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தாலிக்கு தங்கம் திட்டம் குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம்

தாலிக்கு தங்கம் திட்டம் குறித்து அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்- ENS
Updated On :13 செப்டம்பர் 2024, 9:18 am

DIN

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தாலிக்கு தங்கம் திட்டம் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

தமிழகத்தில் பட்டதாரி பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தில் கடந்த 2017 - 2021ஆம் ஆண்டு வரை எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்த தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சித்ரா என்ற பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

வீட்டு வேலை செய்து, தனது மகளை பட்டதாரி ஆக்கிய நிலையில், தாலிக்கு தங்கம் திட்டத்தில் தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தாலிக்கு தங்கம் திட்டத்துக்காக, 2017 - 2021ஆம் ஆண்டு வரை ஒதுக்கிய நிதி தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த தாலிக்கு தங்கம் திட்டத்தில் இதுவரை எத்தனை பேர் பயனடைந்துள்ளார்கள்? எத்தனை பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன? மத்திய - மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.