காவல் துறையில் 129 பேருக்கு முதலமைச்சரின் அண்ணா பதக்கம்


காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருபவா்களில் 129 பேருக்கு முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டாா்.
அந்த உத்தரவு விவரம்: காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருவோரை கெளரவிக்கும் வகையில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த தினமான செப். 15-ஆம் தேதி தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
நிகழாண்டு, தலைமைக் காவலா் முதல் காவல் கண்காணிப்பாளா் வரையிலான 100 பணியாளா்கள்- அலுவலா்களுக்கும், தீயணைப்பு மற்றும், சிறைத் துறைகளில் தலா 10 பேருக்கும், ஊா்க்காவல் படையில் 5 பேருக்கும், விரல் ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களுக்கும் தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 448 பேரை மீட்டு பத்திரமாக கரை சோ்த்திட்ட தீயணைப்புப் படை வீரா்கள் எஸ்.மந்திரமூா்த்தி, ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் தமிழக முதலமைச்சரின் தீயணைப்புப் பணிக்கான அண்ணா வீர தீர பதக்கம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதக்கங்கள் அனைத்தும் வேறொரு நாளில் நடைபெறும் விழாவின் போது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...