

தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உள்பட 54 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப் பணி, வியாபாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருபவா்களை அங்கீகரிக்கரித்து கெளரவப்படுத்தும் விதமாக பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
அதன்படி 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் ஜன.26-ஆம் தேதி குடியரசு நாள் விழாவில் வழங்கப்படவுள்ளது.
நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளுக்கு முந்தைய நாள் அறிவிக்கப்படுகின்றன.
அதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஞாயிற்றுக்கிழமை(ஜன.25) மத்திய அரசு அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்காக நாடு முழுவதிலும் இருந்து இதுவரை 54 பேரை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
அதன்படி, பத்ம விருது பெருபவர்களின் பட்டியலில் மேற்கு வங்கத்தில் இருந்து ஆறு பேரும், அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து ஐந்து பேரும் இடம்பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரத்தில் தலா நான்கு பேரும், அசாம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா மூன்று பேரும், தெலங்கானா, ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், திரிபுரா, புதுச்சேரி, நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், லடாக், கேரளம், ஹரியாணா, தில்லி, சண்டிகர், பிகார் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த 5 பேருக்கு பத்ம விருதுகள்
தமிழ்நாட்டின் நீலகிரியைச் சேர்ந்த குரும்பா ஓவியர் ஆர். கிருஷ்ணாவுக்கு, திருவாரூர் மிருதங்க கலைஞர் பக்தவச்சலம், சேலத்தைச் சேர்ந்த வெண்கல சிற்பக் கலைஞர் ராஜஸ்பதி காளியப்ப கவுண்டர் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்தி நடேசன், திருத்தணியைச் சேர்ந்த ஓதுவார் சுவாமிநாதன் ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று சமூகப் பணிக்காக புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்ப கலைஞர் கே.பழனிவேலுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.