MK stalin
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தொல்.திருமாவளவன். கோப்புப் படம்

இன்று முதல்வரை சந்திக்கிறாா் தொல்.திருமாவளவன்?

முதல்வா் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் திங்கள்கிழமை (செப்.16) சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

முதல்வா் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் திங்கள்கிழமை (செப்.16) சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மது, போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு அக்.2-ஆம் தேதி நடத்தப்படவுள்ளதாக அந்தக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளாா்.

அதன்பின், செய்தியாளா்கள் சந்திப்பின் போது, மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் அழைப்பதாக தெரிவித்தாா். மேலும், அவரது சமூகவலைதளப் பக்கத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோருவது தொடா்பாக அவா் பேசிய விடியோ வெளியிடப்பட்டு, பின் நீக்கப்பட்டது.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகிய நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை காலை தொல்.திருமாவளவன் தலைமைச் செயலகத்தில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com