பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சென்னை நகரிலேயே ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி!

சென்னை பெரம்பூர் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை முயற்சி பற்றி...

ATM

கொள்ளை அடிக்க முயற்சிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம். - Din

Published On :

சென்னை பெரம்பூரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால், ஏடிஎம் இயந்திரம் எச்சரிக்கை ஒலி எழுப்பியதால், கொள்ளை முயற்சியை கைவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

Story image

சென்னை நகரில் கொள்ளை முயற்சி

சென்னை நகரின் முக்கிய பகுதியான பெரம்பூர் ராகவன் தெருவின் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் ஏடிஎம் சேவை மையம் உள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மக்களின் நடமாட்டம் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, ஏடிஎம் மையத்தின் கண்ணாடி கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றுள்ளனர்.

பணத்தை டெபாசிட் செய்யும் இயந்திரத்தை ஆயுதங்களால் சுக்குநூறாக உடைத்த நிலையில், இயந்திரத்தில் இருந்து எச்சரிக்கை சப்தம் எழுந்துள்ளததால், அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

Story image

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு பெரம்பூர் செம்பியம் காவல் நிலைய போலீசார் விரைந்து ஆதாரங்களை கைப்பற்றினர்.

மேலும், ஏடிஎம் மையத்தின் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள மர்ம நபர்களின் அடையாளங்களை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.