அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு!

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு பற்றி...

News image
சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்- TNDIPR
Updated On :16 செப்டம்பர் 2024, 7:23 am

DIN

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டனர்.

பெரியாரின் பிறந்த நாளான செப். 17, சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்தார்.

அன்றைய நாள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாளை பெரியாரின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், சமூக நீதி நாள் உறுதிமொழி இன்று ஏற்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழியை வாசித்தார்.

இந்த நிகழ்வில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.