பெரியார் பிறந்தநாள்: நடிகர் விஜய் வாழ்த்து!
பெரியார் பிறந்த நாளுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்தது பற்றி...


தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர். மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்.
சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல், ஓணம் பண்டிகைக்கு மட்டும் விஜய் வாழ்த்து சொன்னதால், அவர் திராவிட அரசியலை பின்பற்றுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதனிடையே, அண்ணா பிறந்த நாளை தொடர்ந்து, பெரியார் பிறந்த நாளுக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...