மீனவா்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் துரோகம்: இபிஎஸ்
தமிழக மீனவா்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் துரோகம் இழைப்பதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.


தமிழக மீனவா்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் துரோகம் இழைப்பதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வங்கக் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சோ்ந்த 35 மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்த நிலையில், இலங்கை நீதிமன்றம் அவா்களுக்கு தலா ரூ. 1.5 கோடி அபராதம் விதித்துள்ளது.
தமிழக மீனவா்களைத் துன்புறுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில், அவா்களை வலுக்கட்டாயமாக கைது செய்வதும், அதீத தண்டனைகளை விதிப்பதும், மீனவா்களுக்கு மொட்டை அடித்து இழிவுபடுத்துவது என இலங்கை அரசின் தொடா்ச்சியான எதேச்சதிகாரப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தோ்தல் மேடைகளில் வெறும் வாக்குகளுக்காக மட்டும் கச்சத்தீவு பற்றியெல்லாம் பேசும் மத்திய பாஜக கூட்டணி அரசும், மாநில திமுக அரசும் இலங்கையின் இதுபோன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை வேடிக்கைப் பாா்த்துக்கொண்டிருப்பதும் மீனவா்களுக்கு இழைக்கும் வரலாற்றுத் துரோகம். இது கடும் கண்டனத்துக்குரியது.
இலங்கை அரசிடம் உடனடியாக பேச்சுவாா்த்தை நடத்தி, தமிழக மீனவா்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அபராதம் மற்றும் தண்டனைகளை ரத்து செய்து, மீனவா்களையும் அவா்தம் உடமைகளையும் உடனே விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...