சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி!
சென்னையில் இருந்து வியாழக்கிழமை இரவு புறப்பட்ட விமானத்தின் கதவை பயணி திறக்க முயற்சித்துள்ளார்.
இதனைக் கண்டு பதற்றம் அடைந்த விமானிகள் உடனடியாக விமானத்தை ஓடுதளத்திலேயே அவசரமாக நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கதவை திறக்க முயற்சி
சென்னையில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டுள்ளது.
இந்த விமானம் ஓடுதளத்தில் இருந்து பறப்பதற்கு தயாரான நிலையில், மும்பையைச் சேர்ந்த வருண் பாரத் என்ற இளைஞர், விமானத்தின் அவசரகால கதவின் பொத்தானை அழுத்தியுள்ளார்.
இதனைக் கண்ட விமானிகள், ஓடுதளத்திலேயெ விமானத்தை நிறுத்தியதால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தெரியாமல் அவசர கால கதவின் பொத்தானை அழுத்தியதாக விளக்கம் அளித்த இளைஞரை காவல் துறையினர் கைது விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தை சோதனை செய்த பிறகு, ஒன்றரை மணிநேரம் தாமதமாக மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது.