அதிமுகவில் அக்.23 வரை செயல்வீரா்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி
அதிமுகவினா் அக். 23-ஆம் தேதிக்குள் செயல்வீரா்கள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து புதிய உறுப்பினா் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுச் சென்றுள்ளவா்கள், சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினா்களுக்கு விரைந்து வழங்க வேண்டும்.
அந்தப் பணிகள் நிறைவு பெற்றவுடன் மாவட்டச் செயலா்கள் தங்கள் மாவட்டத்துக்கு உள்பட்ட ஒன்றிய, நகர, மாநகராட்சிப் பகுதி வாரியாக செயல் வீரா்கள், செயல் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும்.
அந்தக் கூட்டங்களில் தலைமைக் கழகச் செயலா்கள், முன்னாள் அமைச்சா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று ஆலோசனை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்து நடத்த வேண்டும்.
அந்த ஆலோசனைக் கூட்டங்களை அக்.23-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.