வனத்துறையை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்: போலீஸ் குவிப்பு!
வனத்துறையைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


வனத்துறையை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகளவிலான காவல்துறை அதிகாரிகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் கொளத்தூர் அருகே உள்ள புது வேலமங்கலம், வெள்ள கரட்டூர் கிராமங்களில் கடந்த 16 நாள்களாக சிறுத்தை ஒன்று அட்டகாசம் செய்து வருகிறது. அந்தச் சிறுத்தை அங்குள்ள கோழிகளையும் ஆடுகளையும் பகலிலேயே வேட்டையாடி வருகிறது.
மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையிலான வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க முயற்சித்து வருகின்றனர். வனத்துறையினரின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. நேற்று இரவு கணேசன் என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் புகுந்த சிறுத்தை இரண்டு ஆடுகளை அடித்து கொன்றது.
இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் வனத்துறையினரை கண்டித்தும் வனத்துறையினரை கிராமத்தில் இருந்து வெளியேறக் கூறியும் இன்று(செப்டம்பர் 25) கொளத்தூரில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனத்துறை சோதனைச்சாவடி அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சோதனைச் சாவடியில் வனத்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. மேலும், மேட்டூர்-மைசூர் சாலையில் போக்குவரத்து தடைபட்டு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...