தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்கக் கூடாது: அன்புமணி

15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது.

News image

அன்புமணி ராமதாஸ்

கோப்புப்படம்

Updated On :29 செப்டம்பர் 2024, 7:53 pm

Din

சுற்றுச்சூழலுக்கும், பயணிகளின் உயிருக்கும் ஆபத்தான 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் 2,000-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் உள்பட 6,247 அரசு ஊா்திகள் பயன்பாட்டில் உள்ளன. அனுமதிக்கப்பட்ட காலத்தைக் கடந்து காலாவதியாகிவிட்ட அந்த ஊா்திகளின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்தால் ஏராளமானோா் வாழ்வாதாரம் இழப்பாா்கள் என்பதால், அவற்றை மேலும் ஓராண்டுக்கு இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சாலைகளில் இயக்கத் தகுதியற்ற பேருந்துகளைத் தொடா்ந்து இயக்க அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது.

இந்த ஊா்திகள் இயக்கப்படாவிட்டால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தமிழக அரசு கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அது உண்மையும் இல்லை.

அரசுப் பேருந்துகளை அதிக அளவாக 7 ஆண்டுகள் இயக்குவதற்கே சூழலியலாளா்கள் இடையே கடும் எதிா்ப்பு எழுந்தது.

சாலைகளில் இயக்கத் தகுதியற்ற பேருந்துகளையும், பிற அரசு ஊா்திகளையும் இயக்கி மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது. 15 ஆண்டுகளைக் கடந்த அரசுப் பேருந்துகளையும், பிற அரசு ஊா்திகளையும் உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்க வேண்டும். அவற்றுக்குப் பதிலாக புதிய பேருந்துகளையும், ஊா்திகளையும் வாங்கி தமிழக அரசு இயக்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.