துணை முதல்வராக இன்று(செப். 29) பொறுப்பேற்கவுள்ள உதயநிதிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், துணை முதல்வராக உயர்ந்துள்ள உதயநிதிக்கு வாழ்த்துகள். இன்று, நீங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், தமிழக மக்களுக்கும் உறுதிமொழி ஏற்கவுள்ள நிலையில், அவர்கள் இருவருக்கும் நீங்கள் உண்மையாக சேவை செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ், ”துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதிக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் துணை முதல்வராக, இன்று(செப். 29) மாலை 3.30 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கிறார்.