எனது பணியின் மூலம் பதிலளிப்பேன் - உதயநிதி
என்னை விமர்சிப்பவர்களுக்கு தனது பணியின் மூலம் பதிலளிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.


என்னை விமர்சிப்பவர்களுக்கு தனது பணியின் மூலம் பதிலளிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
தமிழ்நாடு துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களில் ஞாயிற்றுக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எனக்கு வாழ்த்து கூறியவர்கள், என்னை விமர்சிப்பவர்களுக்கு நன்றி.
விமர்சிப்பவர்களின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்படுவேன். விமர்சனங்களை உள்வாங்கிக்கொண்டு என் பணியில் தவறு இருந்தால் அதை திருத்திக் கொள்வேன். துணை முதல்வர் என்பது பதவியல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து பணியாற்றுவேன்.
திமுக இளைஞரணி பொறுப்பு வழங்கப்பட்டபோதும் என்னை விமர்சித்தார்கள். என்னை விமர்சிப்பவர்களுக்கு நான் எனது செயல்பாடுகளின் மூலம் பதிலளிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் இன்று(செப். 29) பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...