பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

புத்தாண்டின் முதல் பொது நிகழ்ச்சி: மோடி பெருமிதம்!

புத்தாண்டின் முதல் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Published On :

திருச்சி: புத்தாண்டின் முதல் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா, திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர், மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

வணக்கம் சொல்லி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, புத்தாண்டின் முதல் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்ற பாரதிதாசனின் கவிதை வரிகளை தமிழில் மேற்கோள் காட்டிய பிரதமர், நன்றி சொல்லி உரையை முடித்தார்.

இந்த விழாவை தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சென்று புதிய முனையத்தை திறந்து வைக்கவுள்ளார்.

மேலும், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்து, பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.