ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டான தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு இன்று (சனிக்கிழமை) தொடங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகிலுள்ள தச்சன்குறிச்சியில் நடைபெறும் ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

வாடிவாசலில் காத்திருக்கும் காளைகள்
முதலாவதாக கோயில் காளைகள் மற்றும் கிராமத்தின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு விழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது

ஜல்லிக்கட்டு
காரைக்குடி, திருப்பத்தூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி ,தஞ்சாவூர், தேவகோட்டை, நாமக்கல், கந்தர்வகோட்டை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 700 க்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்து வரப்பட்டுள்ளன.
பதிவு செய்யப்பட்ட காளைகள் பரிசோதனை செய்யப்பட்டு வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலை நோக்கி அனுப்பி வைக்கப்படுகின்றன.

காளையின் கொம்பில் ரப்பர் உறை
வீரர்கள் காயமுறுவதைத் தடுக்க காளைகளின் கொம்புகளில் கால்நடை துறை சார்பில் ரப்பர் உறை அணிவிக்கப்பட்டுள்ளது.
700-க்கும் மேற்பட்ட காளைகளும் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்களும் களம் காண்கின்றனர்.
மக்கள் ஆயிரக்கணக்கில் ஜல்லிக்கட்டைப் பார்வையிட குவிந்துள்ளனர்.

பார்வையிட திரண்ட மக்கள்
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கும் காளைகளுக்கும் பரிசளிக்க மோட்டார் சைக்கிள், சைக்கிள், மிக்ஸி, கட்டில், இரும்பு பீரோ, சில்வர் அண்டா, மின்விசிறி போன்ற பரிசு பொருள்களும் ரொக்க பரிசும் அளிக்கப்படவுள்ளன.

ஜல்லிக்கட்டு திடல்
ஜல்லிக்கட்டு நடைபெறும் வளாகம் அருகே மருத்துவதுறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தஞ்சையில் விழிப்புணா்வு ஆரோக்கிய நடைப்பயிற்சி

நாக்பூரில் ரயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் மீதான இந்த அடக்குமுறை அநீதியானது: அன்புமணி கண்டனம்
பாகிஸ்தானில் அமைதிப் பேரணியில் வெடிகுண்டு தாக்குதல்: 14 பேர் பலி!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



