100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

3 வயது குழந்தையைக் கொன்ற சிறுத்தை வண்டலூரில் அடைப்பு!

பந்தலூரில் 3 வயது குழந்தையைக் கொன்ற சிறுத்தை வண்டலூரில் உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டுள்ளது.

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சிறுத்தை.

Published On :

பந்தலூரில் 3 வயது குழந்தையைக் கொன்ற சிறுத்தையை  வனத்துறையினர் வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் அடைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூா் அருகில் கடந்த டிசம்பா் 21-ஆம் தேதி தேயிலைத் தோட்டத்தில் நடந்து சென்ற மூன்று பெண்களை சிறுத்தை தாக்கியது. காயமடைந்த மூன்று பெண்களில் இருவா் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், படுகாயமடைந்த சரிதா என்ற பெண் கோவை மருத்துவமனையில் கடந்த டிசம்பா் 29-ஆம் தேதி உயிரிழந்தாா். அதே பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கியதில் சிறுமி காயத்துடன் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

பந்தலூா் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியில் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சிவசங்கா் கா்வால் என்பவரின் மனைவி மிலன்தேவி தனது மகள் நான்சியுடன் (3) சனிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை குழந்தையைத் தாக்கி கவ்விச் சென்றது. அருகில் இருந்த தொழிலாளா்கள் தேயிலைத் தோட்டம் முழுவதும் தேடி படுகாயங்களுடன் கிடந்த குழந்தையை மீட்டு பந்தலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் குழந்தை உயிரிழந்தது.

இந்நிலையில், ஆம்பரோஸ் என்ற பகுதியில் புதரில் சிறுத்தை பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது. முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் கும்கியில் அமா்ந்து சிறுத்தைக்கு மயக்க ஊசியை செலுத்தினாா். இதில் மயக்கமடைந்த சிறுத்தையை வனத் துறையினா் பிடித்து கூண்டில் அடைத்தனா்.

இந்த நிலையில், பந்தலூரில் இருவரைக் கொன்று, மூவரைத் தாக்கிய சிறுத்தை நேற்று பிடிக்கப்பட்ட நிலையில், இன்று வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.