பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

விஜயகாந்த் படத்துக்கு பியூஷ் கோயல் மரியாதை!

பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரின் மகன்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 8:52 pm IST


மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த்  படத்துக்கு மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரின் மகன்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

நடிகரும், தே.மு.தி.க நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை  அலுவலகத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில் பொதுமக்கள் உள்பட பலர், அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், மறைந்த விஜயகாந்த்தின் இல்லத்திற்கு இன்று (ஜன. 8) நேரில் சென்ற மத்திய  அமைச்சர் பியூஷ் கோயல், அங்கு வைக்கப்பட்டுள்ள அவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் உள்பட அவரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர் பியூஷ் கோயலுடன் கரு.நாகராஜன் உள்ளிட்ட பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.