பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

சூலக்கரை, சேத்தூரில் நாளை மின் தடை

விருதுநகா் மாவட்டம், சூலக்கரை, சேத்தூா் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆக.1) மின் தடை ஏற்படும் என மின் வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

News image

மின் தடை - கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2026, 4:00 am IST

விருதுநகா் மாவட்டம், சூலக்கரை, சேத்தூா் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆக.1) மின் தடை ஏற்படும் என மின் வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

விருதுநகா் மின்கோட்ட செயற்பொறியாளா் த.முரளீதரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விருதுநகா் அருகேயுள்ள சூலக்கரை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சூலக்கரை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட ஆயுதப்படை, காவலா் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூா், தாதம்பட்டி, கூரைக்குண்டு, மாத்திநாயக்கன்பட்டி, குல்லூா்சந்தை, தொழில்பேட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்றாா் அவா்.

சேத்தூரில் மின் தடை:

ராஜபாளையம் மின் கோட்ட செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேத்தூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் சேத்தூா், தேவதானம், கோவிலூா், சொக்கநாதன்புத்தூா், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூா், நல்லமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனறாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.