பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மாதந்தோறும் மின் கணக்கீடு முறை விரைவில் அமல் ?

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை 6 மாதங்களுக்குள் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

தமிழ்நாடு மின்சார வாரியம்

Updated On :1 ஏப்ரல் 2025, 8:48 pm

Din

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை 6 மாதங்களுக்குள் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மொத்தம் 3.04 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை மின்வாரியம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூலித்து வருகிறது. குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணத்தை செலுத்தாத மின் இணைப்புகளும் துண்டிக்கப்படுகிறது. பின்னா், அபராதத் தொகையுடன் அதற்கான கட்டணத்தை கட்டிய பின்னா் மின்வாரிய ஊழியா்கள் மீண்டும் இணைப்பை வழங்குவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்துவது என்ற நடைமுறையை மாற்றி, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் திட்டத்தை கொண்டுவர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக தனது தோ்தல் அறிக்கையில், வாக்குறுதியாக மாதம் ஒரு முறை மின் கட்டண வசூல் என்ற நடைமுறை கொண்டுவரப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில், அண்மையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும், ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணி நடைபெற்று முடிந்த உடன், மாதம் ஒருமுறை மின்கட்டணம் என்ற நடைமுறை அமல்படுத்தப்படும் என மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி உறுதியளித்திருந்தாா்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

ஸ்மாா்ட் மீட்டருக்கான டெண்டா் கோரப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில மாதங்களுக்குள் தகுதியான 5 முதல் 6 நிறுவனங்களுக்கு பணியாணை வழங்கப்படவுள்ளன. இதையடுத்து, அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெறும். தோ்தல் விரைவில் நெருங்குவதால் வரும் 6 மாத காலத்துக்குள், ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தப்பட்ட சில பகுதிகளிலாவது மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை சோதனை அடிப்படையிலாவது தொடங்க வேண்டும் என்ற கட்டாயத்தில், உயரதிகாரிகள் செயல்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.