
தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அரசு முறைப் பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, வருகிற 5-6 ஆம் தேதிகளில் இலங்கை செல்கிறார். அங்கிருந்து தமிழகம் வரும் பிரதமர் மோடி, 6 ஆம் தேதி ராமேசுவரத்தில் பாம்பன் பாலத் திறப்பு விழாவில் பங்கேற்கவிருக்கிறார்.
2026 ஆம் ஆண்டுக்கான பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி விவகாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. திமுக தலைமையில் இந்தியா கூட்டணியும், நாம் தமிழர், தவெக என ஒருபுறம் தனித்தனியாகவும் அதிமுக - பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
அதிமுக - தவெக கூட்டணி அமையும் என நினைத்த வேலையில், எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகளின் தில்லி பயணம் ஆகியவை கிட்டத்தட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அதிமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாற்றவும் தலைமை முடிவெடுத்திருக்கிறது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து பேசினர்.
பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின் போது அவரை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளனர்.
இருவரையும் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் விரைவில் கூட்டணி முடிவு குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும், தனித்தனியே உடைந்து கிடக்கும் அதிமுகவின் அணிகளும் ஒன்றாக இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.