ஒரே நாளில் 22 கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டதாக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
அமைச்சா் பி.கே.சேகா்பாபு
அமைச்சா் பி.கே.சேகா்பாபு
Updated on

தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டதாக இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை திமுக உறுப்பினா் ப.காா்த்திகேயன் எழுப்பினாா்.

அதற்கு, அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்: தமிழ்நாட்டில் வெள்ளிக்கிழமை (ஏப்.4) ஒரே நாளில் 22 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட உத்தரகோசமங்கை கோயில், மருதமலை உள்பட 3 கோயில்களும், நூறாண்டுகளுக்கு மேற்பட்ட 5 கோயில்களிலும் குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது, 115 பெண் ஓதுவாா்கள் உள்பட 350-க்கும் மேற்பட்ட தமிழ் ஓதுவாா்கள் 22 கோயில்களிலும் திருமுறை பாடினா் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com