பிரபல சின்ன திரை நடிகர் மீது மனைவி அடுக்கடுக்கான புகார் !

பிரபல சின்ன திரை நடிகர் ஐயப்பன் மீது அவரது மனைவி பிந்தியா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
பிரபல சின்ன திரை நடிகர் மீது மனைவி அடுக்கடுக்கான புகார் !
Published on
Updated on
1 min read

பிரபல சின்ன திரை நடிகர் ஐயப்பன் மீது அவரது மனைவி பிந்தியா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமாக இருப்பவர் ஐயப்பன். இவருக்கும் பிந்தியா என்ற பெண்ணுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று மகள் இருக்கிறார். இவர்கள் 12 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. குறிப்பாக ‘கயல்’ என்ற தொடரில் நடிக்கத் தொடங்கிய பிறகு இருவருக்குள்ளும் அதிகடிப்படியான சண்டைகள் ஏற்பட்டுள்ளன.

இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் தனது கணவர் ஐய்யப்பன் மீது மதுரவாயலில் உள்ள விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிந்தியா புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனது கணவர் ஐயப்பன் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, தன்னை தொடர்ந்து துன்புறுத்தல் செய்வதாகவும், சண்டைபோடுவதாகவும், தனது மகள் முன்னிலையில் சண்டையிட்டு ஆபாச வார்த்தைகளை பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இருவரும் பேசாமல் இருந்து வந்த நிலையில், தனது கணவரிடம் பேசி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர பிந்தியா முயன்று வருகிறார். அந்த வகையில் வளசரவாக்கம் பகுதியில் சின்னத்திரை தொடர் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அங்கு சென்ற பிந்தியா தனது கணவர் ஐயப்பனை பார்க்க வேண்டும் எனக் கூறினார். அவரை படப்பிடிப்பு குழுவினர் உள்ளே அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு செய்தியாளர்களிடம் பேசிய பிந்தியா, “எனது கணவர் 3 வருடங்களாக வீட்டிற்கு பணம் எடுக்கவில்லை. எனது மகள் தொடர்பாக எந்த அக்கறையும் எடுத்துக்கொள்வதில்லை. இதுதொடர்பாக என்னிடம் பேச மறுக்கிறார். இதனால் எனக்கும் எனது மகளுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் வீட்டிற்கு குடித்துவிட்டு போதையில் வந்து அடிக்கிறார், பொருட்களை உடைக்கிறார்.

ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு!

எனது மகளிடம் எதற்கு பிறந்தாய் எனக்கூறி மன உளைச்சலை ஏற்படுத்துகிறார். எனது பெற்றோருக்கு போன் செய்து உங்கள் மகளை விவாகரத்து செய்துவிடுவேன் எனக்கூறி பிரச்னை செய்கிறார். இதுதொடர்பாக யாரும் கேள்விகேட்க முடியாது என்ற எண்ணத்தில் இப்படி செய்கிறார். அவரிடம் பேச மூன்று நாட்களாக முயற்சி செய்கிறேன்.ஆனால் முடியவில்லை. இதற்கு எனக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும்.

இந்த தொடரால் எனது வாழ்க்கையே பறிபோய்விட்டது என்று குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com