காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

அமித் ஷா நாளை தமிழகம் வருகை!

அமித் ஷா தமிழக வருகை தொடர்பாக...

News image

மத்திய அமைச்சர் அமித் ஷா - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2025, 3:10 pm IST

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை(ஏப். 10) இரவு தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிகார் மாநிலத்தில் நிகழாண்டு இறுதியிலும், மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் அடுத்த ஆண்டும் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த மூன்று மாநிலங்களுக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக நிர்வாகிகளை சந்திக்கவுள்ளதாக முன்னதாக தகவல் தெரியவந்தது.

தமிழகத்தைப் பொருத்தவரை எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து 2026 பேரவைத் தோ்தலைச் சந்திக்கும் என எதிர்பாா்க்கப்படுகிறது.

கடந்த மாதம் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தில்லி சென்று அமித் ஷாவை சந்தித்த பிறகு இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகக் கருதப்படுகிறது.

அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சு தொடர்பாகவும், தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதற்காகவும் அமித் ஷா தமிழகம் வருகை தரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாளை மறுநாள்(ஏப். 11) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு தரப்பினரையும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளார்.

இந்த அரசியல் சூழலில் அமித் ஷாவின் தமிழக வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.